அமேசான் தனது ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தை உலகளவில் மிகவும் குறுகிய காலகட்டத்திலே விரிவாக்கம் செய்ய மிக முக்கிய வழியாக இருந்தது, உலக நாடுகளில் இருக்கும் ஈகாமர்ஸ் நிறுவனங்களைக் கைப்பற்றுவதன் வாயிலாக விரிவாக்கம் செய்தது. இதே பார்மூலாவை தற்போது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மற்றும் மீடியா துறையில் அமேசான் பயன்படுத்தத் துவங்கியுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி கார்டூடன் மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்-ஐ சுமார் 9 பில்லியன் டாலருக்குக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தை வாங்குவதன் மூலம் அமேசான் நிறுவனம் MGM நிறுவனத்தின் அனைத்து கார்டூன், திரைப்படங்கள் எனப் பலவற்றையும் பெறுவது மட்டும் அல்லாமல் தனது ப்ரைம் டிஜிட்டல் சேவை தளத்திலும் இதை இணைக்க முடியும்.