கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது. வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த தாழ்வு நிலை இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்றும், மே 26ம் தேதியன்று ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்திற்கு இடையில் கரையை கடக்கும் என்று நம்பப்படுகிறது. யாஸ் சூறாவளியால் எழும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்திய இராணுவம் ஒடிசாவில் இரண்டு பொறியாளர் பணிக்குழுக்கள் மற்றும் அணியினரை நிறுத்தியிருக்கிறது. அதேபோல் மேற்கு வங்காளத்தில் எட்டு அணியினரையும் மற்றும் ஒரு பொறியாளர் பணிக்குழுவையும் (Engineer Task Force) தயார் நிலையில் வைத்துள்ளது.