Wednesday, June 16, 2021
HomeSportsஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கு 20 அணிகளைக் களமிறக்கப் பரிசீலித்து வருகிறது.

பரபரப்பான உலகில் 3 மணி நேரத்தில் முடியும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத பொழுதுபோக்கு கிரிக்கெட் வடிவமான டி20 அதிக பார்வையாளர்களை உலகம் முழுதும் ஈர்க்கின்றது.

ஆனால் 2021-ம் ஆண்டின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 16 அணிகள்தான் பங்கேற்கின்றன. 2024-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் அணிகளைக் கூட்டுவதற்கு ஏற்கெனவே ஐசிசி அனுமதியளித்துள்ளது.

இது வெற்றியடைந்தால் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் கூடுதல் அணிகளை இறக்க ஐசிசி முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் ஆதிக்கம் செலுத்தும் ஐசிசி முடிவுகளில் ஏற்கெனவே அதிகமிருந்த அணிகள் குறைக்கப்பட்டு 10 அணிகளுக்கான உலகக்கோப்பையாகி விட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments