Wednesday, June 16, 2021
HomeTechnologyகொரோனா பரவலுக்கு மத்தியில், டிவிஎஸ்!!

கொரோனா பரவலுக்கு மத்தியில், டிவிஎஸ்!!

வெளிநாட்டு சந்தைகளில் எண்டார்க் 125 ஸ்கூட்டரின் விற்பனையில் நம்மூர் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வெற்றிக்கரமாக 1 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

இந்தியாவை தவிர்த்து உலகளவில் சேவை மையங்கள் டிவிஎஸ் நிறுவனத்திற்கு 60 நாடுகளில் உள்ளன. இந்த நிலையில் இன்று, “சர்வதேச சந்தைகளில் எங்களது ஸ்மார்ட் ஸ்கூட்டரான டிவிஎஸ் எண்டார்க்125 1 லட்ச விற்பனை மைல்கல்லை அடைந்திருப்பதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைக்கிறோம்.

டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டரின் சிறப்பம்சம் என்று பார்த்தால், இந்த ஸ்கூட்டரில் ஹெட்லேம்ப், டெயில்லேம்ப் & டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளிட்டவற்றில் எல்இடி விளக்குகள் பொருத்தப்படுகின்றன. முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆனது நாவிகேஷன் உதவி, லேப்-டைமர், மொபைல் போனின் பேட்டரியின் அளவை காட்டும் திரை, கடைசியாக பார்க் செய்யப்பட்ட இடத்தை கண்டறிய உதவுதல், சர்வீஸ் நினைவூட்டுவான் உள்ளிட்டவற்றை கொண்டதாக உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments