Thursday, November 25, 2021
V4UMEDIA
HomePoliticalமத்திய அமைச்சருக்கு ஒரு பாட்டில் கோமியத்துடன் கடிதம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ

மத்திய அமைச்சருக்கு ஒரு பாட்டில் கோமியத்துடன் கடிதம் அனுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், தங்களைக் காத்துக் கொள்ளும் பொருட்டு சிலர் பசுவின் கோமியத்தை அருந்தி  வருகிறார்கள். குஜராத்தின் சில இடங்களில் பசுவின் சாணத்தில் குளிப்பது, கோமியத்தை அருந்துவது போன்ற சம்பவங்கள் வரிசையாக நடந்து வருகின்றன. கால்நடைகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும்  பல்வேறு மருத்துவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இத்தகைய சூழலில்,  பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் தான் தினமும் பசுவின் கோமியம் குடிப்பதாகக் கூறி சர்ச்சையை கிளப்பினார்.கொரோனாவால் பாதிக்கும் நோயாளிகளின் சுவாச பிரச்சினையை கோமியம் குணப்படுத்தும் என்றும் நான் தினமும் கோமியத்தை அருந்துவதால் எனக்கு கொரோனா வரவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், போபாலின் தென்மேற்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சர்மா பசுவின் கோமியம் கொரோனாவைகுணப்படுத்துகிறதா என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், பாஜக எம்.பி பிரக்யா தாகூர் சொல்வது போன்ற தவறான தகவல்கள் அப்பாவி மக்களை தவறாக வழிநடத்த கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். கடிதத்துடன் சேர்த்து ஒரு பாட்டில் கோமியத்தையும் நிரப்பி ஹர்ஷ்வர்தனுக்கு அனுப்பி இருக்கிறார் இந்த செய்து மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments