Wednesday, June 16, 2021
HomePoliticalமனித நேயத்துடன் செயல்பட்ட இளம்பெண் இளையராணி - நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்

மனித நேயத்துடன் செயல்பட்ட இளம்பெண் இளையராணி – நேரில் பாராட்டி பரிசளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்

மயங்கி விழுந்த மூதாட்டிக்கு யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இன்று சேலம் சென்றிருந்த போது இளையராணியை சந்தித்து பாராட்டி பரிசளித்துள்ளார் மு.க ஸ்டாலின்.


சேலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவரை அவரது மகன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, சாலையிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

கொரோனா அச்சத்தில் யாரும் அந்த மூதாட்டிக்கு முதலுதவி அளிக்க முன்வரவில்லை. அப்போது அந்த வழியாக சென்ற இளம்பெண் இளையராணி மூதாட்டியை இருசக்கர வாகனத்தின் நடுவில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இளைய ராணியின் மனித நேயத்தை பார்த்து நெகிழ்ந்து போன முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை சேலம் விமான நிலையத்திற்கு வர வழைத்து பாராட்டி புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments