சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். திருச்சி, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே 3,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இன்றும், நாளையும் நச்சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இரவில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு, தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு செல்ல ஏதுவாக சென்னையில் மாநகர பேருந்துகளும் இயக்கப்படுகிறது. நாளை சென்னையிலிருந்து மதுரைக்கு கடைசி பேருந்து இரவு 11.30-க்கு புறப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. நாளை சென்னையிலிருந்து திருச்சிக்கு கடைசி பேருந்து இரவு 11.45-க்கு புறப்படும். இதேபோல் நெல்லைக்கு இரவு 8 மணிக்கும், தூத்துக்குடி இரவு 7 மணிக்கும் கடைசி பேருந்து இயக்கப்படும்.