தொலைந்த 40 நிமிடங்களில் ஹூண்டாய் ஐ10 காரை போலீஸார் கண்டுபிடித்து அதன் உரிமையாளரிடத்தில் கொடுத்திருக்கின்றனர். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. திருடை உடனடியாக மடக்கிப்பிடித்ததால் காரில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் வாயிலாகவே போலீஸார் இவ்வளவு விரைவில் காரை கண்டுபிடித்திருக்கின்றனர். கார் இருக்கும் இடத்தை மிக துள்ளியமாக வழங்க உதவும் கருவியே ஜிபிஎஸ். இதனை ஹுண்டாய் ஐ10 கார் பயனர், அக்காரில் பொருத்தியிருக்கின்றனர்.
இதை அறியாமல் திருடிச் சென்ற திருடன், மிக குறுகிய நேரத்தில் போலீஸாரின் தேடலில் சிக்கியிருக்கின்றார். இத்தகைய சிறப்பு வசதி ஜிபிஎஸ் கருவியில் இருக்கின்ற காரணத்தினாலயே வாகனத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவியைக் கட்டாயம் பொருத்துமாறு அறிவுறுத்துகின்றனர்.