இந்தியாவில் OnePlus நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவியாக OnePlus TV 40Y1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த புதிய OnePlus ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது தற்போதுள்ள 32 அங்குல மற்றும் 43 அங்குல ஒய்-சீரிஸ் மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும்.
OnePlus TV 40Y1 மாடலானது முன்னதாக வெளியான 43 இன்ச் மாடலுடன் பல அம்சங்களை பகிர்ந்து கொள்கிறது. அதாவது காமா எஞ்சின், கன்டென்ட் கண்டுபிடிப்புக்கான ஆக்ஸிஜன் பிளே, ஆண்ட்ராய்டு டிவி 9.0, கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் எளிதான தேடலுக்கான அலெக்சா (Alexa), டால்பி ஆடியோ ஆதரவுடன் 20W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்றவைகளை கொண்டுள்ளது.