கொரோனா (Covid-19) தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை எதிர்கொள்கிறது. இதற்கு உதவ பி.சி.சி.ஐ யும் முன்வந்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கு 2,000 ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது.
அடுத்த சில மாதங்களில், இந்த கான்செண்ட்ரேட்டர்கள் (Oxygen Concentrators) நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்படும். முன்னதாக, விராட் கோலி, ரிஷாப் பந்த், ஹனுமா விஹாரி, ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, ஷிகர் தவான் உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் கொரோனா போரில் உதவியுள்ளனர். இதற்கிடையில் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களை வழங்குவது குறித்த தகவலை பிசிசிஐ டிவிட்டர் மூலம் வழங்கி உள்ளது. அதில், COVID-19 தொற்றுநோயை சமாளிப்பதில் இந்தியாவின் முயற்சிகளை அதிகரிக்க பி.சி.சி.ஐ (BCCI) 10-லிட்டர் 2000 ஆக்ஸிஜன் செறிவுகளை வழங்க உள்ளது. என்று பதிவிட்டுள்ளது.