மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில், இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக காலை 11:30 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேச கல்வி அமைச்சர்கள், கல்வி செயலாளர்கள் மற்றும் மாநில தேர்வு வாரியங்களின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
12ம் வகுப்பு மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்க உள்ள இந்த கூட்டத்தில், தேர்வுகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்தும் கருத்துக்கள் கேட்டறியப்பட உள்ளன.