கொரோனா தொற்று பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி (Chennai Corporation) தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர்கள் கொரோனா மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.