Sunday, March 26, 2023
V4UMEDIA
HomePoliticalவிஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்- தொண்டர்கள் மகிழ்ச்சி

விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்- தொண்டர்கள் மகிழ்ச்சி

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே கட்சி நடவடிக்கைகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மைத்துனர் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் ஆகியோரே கவனித்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த ஆண்டு விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டார். அதனைத்தொடர்ந்து, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை. இருப்பினும், பேச முடியாமல் அவதிப்பட்ட அவர் கைகளை மட்டும் காட்டியபடி பிரசாரம் மேற்கொண்டார். அதேசமயம், அவர் முதன்முதலாக போட்டியிட்ட விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட மினி கேப்டனும், அவரது மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் படு தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்திற்கு திடீரென நேற்று அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட விஜயகாந்த் வீடு திரும்பியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments