20 முன்னணி கிளப் அணிகள் இடையிலான இந்தப் போட்டியில் மாட்ரிட் அணி வென்றது. ஒவ்வொரு அணியும் பிற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றும்.
லீக் ஆட்டங்கள் முடிவில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 25 வெற்றி, 8 டிரா, 4 தோல்வியுடன் 83 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தது. ரியல் மாட்ரிட் அணி 24 வெற்றி, 9 டிரா, 4 தோல்வியுடன் 81 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருந்தது. 2 புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் அட்லெடிகோ மாட்ரிட் அணி பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது
நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட், வல்லாடோலிட் அணியையும், ரியல் மாட்ரிட், வில்லா ரியல் அணியையும் எதிர்கொண்டன.. ஆட்டத்திற்கு பிறகு அட்லெடிகோ மாட்ரிட் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.