லாலு பிரசாத் யாதவ் பீகார் முதல்வராக இருந்த போது 1996ம் ஆண்டு கால்நடைத் தீவன ஊழல் செய்தது தொடர்பாக அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 4 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு மொத்தமாக சுமார் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தும்கா கருவூலத்தில் இருந்து 3.13 கோடி ரூபாய் ஊழல் செய்தது தொடர்பான 4வது வழக்கில் ஜாமீன் கோரி லாலு பிரசாத் யாதவ் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 3 வருடங்களுக்கு பிறகு லாலு, பீகாரிலுள்ள தனது வீட்டுக்கு வந்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொண்டர்களுடன் பேசினார். இந்த உற்சாகம் குறைவதற்குள், இன்னொரு நல்ல செய்தி அவருக்கு கிடைத்துள்ளது. லஞ்சம் பெற்ற வழக்கு ஒன்றை ஆதாரம் இல்லாததால் கைவிட்டுள்ளது சிபிஐ.