ஒருவார காலம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு(மே 31 வரை) தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதில், மருந்தகங்கள். உணவகங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும், பார்சல் சேவைக்கு அனுமதி, ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற டெலவிரி சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலங்கள், அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும், வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து மற்ற எதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், நாளை முதல் ரேஷன் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ரேஷன் கடைகள் நாளை முதல் 31ம் தேதி வரை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும். இதேபோல், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் இயங்க அனுமதி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.