பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 11,407 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று 82 பேர் உயிரிழந்தனர். பீகாரில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.09 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் ஊரடங்கு நாட்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் லாக்டவுன் அறிவித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர்நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க நேரும் என்று கூறப்பட்ட நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.