கரிசல் குயில் தன் கானத்தை நிறுத்திக்கொண்டது. மண்ணின் மனம் கமழ்ந்த தென்றல் காற்றின் பரிசம் எங்கே என்ற ஏக்க பெருமூச்சே தமிழ் நெஞ்சங்களுக்கு மிச்சமாகிறது.
கரிசல் மண்ணில் மழை பெய்யும் போது வரும் வாசம் போன்றது கி.ராவின் எழுத்து. கீழ்தட்டு மக்களின் வாழ்க்கையை எளிமையாக எழுதி நிதர்சனத்தை புரிய வைத்தவர் கி.ரா. சென்ற நூற்றாண்டின் கரிசல் காட்டுத் தமிழ்புலத்தின் ஆகச்சிறந்த கதைசொல்லி கி.ராஜநாரயணன். அன்னாரின் மறைவுக்கு தமிழுலகமே கண்ணீரஞ்சலி செலுத்துகிறது.