தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீனவர்களுக்கு ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடல் மீன்வளத்தை பேணிக்காத்திட தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ம் நாள் அன்று தொடங்கி ஜூன் 14-ம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ம் நாளன்று தொடங்கி ஜூலை 31-ம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மீன்பிடி தடைக்காலத்தின்போது மீன்பிடி விசைப்படகுகளில், இழுவைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழு நேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழில் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீன்வர்கள் தங்கள் குடும்பத்தினை சிரமமின்றி நடத்தி செல்ல 2008-ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.