சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தொடர்ந்து, சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், பொதுசெயலாளர் சந்தோஷ் பாபு , சுற்றுசூழல் பிரிவு மாநில செயலாளராக இருந்த பத்மபிரியா உள்ளிட்ட பலர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதற்கிடையில், நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் முருகானந்தம் தனது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்திலிருந்து சி.கே.குமரவேல் விலகினார். இதுகுறித்து அவர், 233 தொகுதிகள் போனாலும் பரவாயில்லை ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என நினைத்தார்.தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்து இருக்கற அரசியலை விடவும். மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் பாதையில் பயணிக்க விரும்புகிறேன். ஆகவே, மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து உடனடியாக விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.