இன்று வரை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 181 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடை கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இதுவரை பெறப்பட்ட தொகையில் இருந்து ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை கொண்டு வரவும் முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை முதற்கட்டமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.