ஐபிஎல் தொடர் ரத்தானவுடன் வீடு திரும்பிய சாஹல் தன் பெற்றோருக்குக் கொரோனா தொற்று இருப்பதையும் தாயார் வீட்டிலும் தந்தை மருத்துவமனையிலும் சிகிச்சையில் இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஆனாலும் சாஹல் மனதைத் தேற்றிக் கொண்டு கொரோனா உதவி கேட்டவருக்கு உதவி புரிந்து அசத்தியுள்ளார். பெங்களூருவில் கெட்டோ என்ற தன்னார்வ அமைப்பின் வலைத்தளத்தில் ஒரு நபர் தனது தோழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாகவும் இத்தனை நாட்கள் அவருக்காக தான் செலவழித்ததாகவும் மேலும் ரூ.4 லட்சம் தேவைப்படுகிறது என்றும் யாரேனும் உதவினால் நல்லது என்றும் கேட்டிருந்தார்.
உடனே சாஹல் அந்த வலைத்தளத்துக்கு ரூ.2 லட்சம் அளித்து உதவி புரிந்தார். இதே கெட்டோவின் நிதிதிரட்டல் முயற்சிக்கு விராட் கோலி மேற்கொண்ட நடவடிக்கைக்கு சாஹல் 95,000 கொடுத்திருந்தார் சாஹல்.
தன் வீட்டில் கொரோனா பாதிப்பு இருந்த போதும் உதவி கேட்டவருக்கு உடனடியாக நன்கொடை அளித்த சாஹலை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.