கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரூபாய் 50 காசுகளுக்கு விற்றது. அது நேற்று, 94 ரூபாய் 71 காசுகளாக அதிகரித்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 94 ரூபாய் 86 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசலின் விலையும் 25 காசுகள் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் 88 ரூபாய் 87 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.