அடுத்த தலைமுறை ஆப்பிள் ஏர்போட்ஸ் 3 விரைவில் வெளியாகும் என பல மாதங்களாகவே தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் மே 18 அன்று ஆப்பிள் நிறுவனம் தனது பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், செவ்வாய்க்கிழமைகளில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதாக நிறுவனத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருவோர் மூலம் அறியப்படுகிறது.
எனவே செய்வாய்க்கிழமையான மே 18 ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகம் ஆக கூடிய வாய்ப்பை உறுதிப்படுத்துகின்றன. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஏர்போட்ஸ் 3 சாதனமும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த தகவலை பிரபல யூடியூபரான லூக் மியான் ஆப்பிள் ட்ராக்கிற்கு அளித்த பேட்டியில் பிரத்தியேக விவரங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS-க்கான மியூசிக் ஸ்ட்ரீமிங் app-ற்கான ஆப்பிள் மியூசிக் ஹைஃபை மியூசிக் டைரையும் நிறுவனம் வெளியிடக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த புதிய ஸ்ட்ரீமிங் பிளான் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்க டோல்பி அட்மோஸ் மற்றும் டோல்பி ஆடியோ போன்ற மேம்பட்ட ஆடியோ வடிவங்களைக் கொண்டுவரும் என்று தெரிவிக்கப்படுகிறது. முன்னர் வெளியான தகவல்களின் படி Apple AirPods 3-யானது, AirPods Pro போன்றே ஒத்த வடிவமைப்பை கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் அரை காது வடிவமைப்பு டிசைனில் வெளிவரும் படத்தில் இதில் நிச்சயம் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேக்ஷன்தொழில்நுட்பம் கொடுக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.