ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க், வித்தியாசமான சிந்தனை மற்றும் நடைமுறையால் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தன்னுடைய வளர்ச்சி மற்றும் இந்த சிந்தனைக்கான காரணம் குறித்து அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
தன்னுடைய வித்தியாசமான சிந்தனையால் எதிர்காலத்தில் பண விஷயத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என சிந்ததித்து மல்டி பில்லியன் டிரேட் பான்ட் புரோபசலை தயார் செய்து வங்கி மேலாளரிடம் கொடுத்துள்ளார். அப்போது, அந்த வங்கியின் மேலாளராக இருந்த பீட்டர் நிக்கோலஸூம் மஸ்கின் முடிவை ஏற்றுக்கொண்டிருந்துள்ளார். இதனால் மகிழ்ச்சியில் இருந்த மஸ்க், தன்னுடைய உதவித்தொகையில் நாள்தோறும் ஒரு டாலர் உயரும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.
மஸ்கின் ஒரே எண்ணம், தன்னுடைய உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்பது மட்டுமே. அதற்காக அந்த வேலையில் அவர் ஈடுபட்டார். எதிர்பாரதவிதமாக மஸ்கின் இந்த புரோபோசலை வங்கி இயக்குநர் நிராகரித்துவிட்டார். இதனால், கோபமடைந்த மஸ்க், தான் நினைத்ததுபோன்று வங்கி பரிவர்த்தனையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அதன்படியே, 1999ம் ஆண்டு ஸ்டார்ட் அப் எக்ஸ்.காமை (Startuo x.com) உருவாக்கினார். பின்னர், Confinity நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு 2000ம் ஆண்டில் Paypal – ஆக மாறியது.
Paypal வருகைக்குப் பின்னர் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மேலோங்கியது. மஸ்க்கின் இந்த வித்தியாசமான சிந்தனையே, தற்போது வங்கிகள் நஷ்டத்தில் சென்றதற்கு காரணம் என்று கூட நிபுணர்கள் கூறுகின்றனர். வங்கிகள் பற்றி மஸ்க் பேசும்போது, வங்கிகள் மிக அதிக செல்வத்தைக் கொண்டிருந்தாலும், அதனால் ஒரு பயனும் இல்லை எனத் தெரிவிக்கிறார். அவருடைய வார்த்தையில் கூறவேண்டும் என்றால் ‘bankers’ are ‘dumb and rich’ என குறிப்பிடுகிறார்.
வங்கிகள் அனைத்தும் ஒரே மாதிரியான போக்கை மட்டுமே கடைபிடித்து வருவதாக கூறிய அவர், ஒரு வங்கி செய்வதை மட்டுமே மற்றொரு வங்கியும் செய்வதாக கூறுகிறார். ஒரு பெரிய அறையில் தங்க குவியலை குவித்து வைத்திருந்தால் கூட, ஒருவர் எடுக்கவில்லை என்றால் அங்கிருக்கும் மற்றவர்களும் எடுக்கமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். வங்கிகளில் பணியாற்றிய அந்த அனுபவம், நிதி சார்ந்த எதிர்கால திட்டங்களை வடிவமைக்க உதவியதாக மஸ்க் தெரிவித்தார். PayPal -க்கு பின்னரே ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களை உருவாக்கி, அந்த நிறுவனங்கள் தற்போது உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட்டாக உருவெடுத்து, கோலோச்சி வருகின்றன. மின்சார கார் தயாரிப்பில் உலகளவில் டெஸ்லா முன்னணி நிறுவனமாக உள்ளது.