டெஸ்லா நிறுவனத்தை உருவாக்கியதற்கு மிக முக்கியமான காரணம் சுற்றுச்சூழ்நிலையைப் பாதிக்காத ஒரு போக்குவரத்து முறையை உருவாக்க வேண்டும் என்பது. இதற்காகத் தான் எலக்ட்ரிக் கார் உருவாக்கும் இதேவேளையில் சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையைப் பெரிய அளவில் ஊக்குவித்து அதை முக்கியமான வர்த்தகமாக மாற்றினார்.
ஆனால் பிட்காயின் உருவாக்குவதில் சுற்றுச்சூழ்நிலையைப் பாதிக்கும் வழியில் உருவாக்கப்பட்ட மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தும் காரணத்தால், இது தனது கொள்கைக்கு முரண்பாடாக உள்ளது. இதனால் டெஸ்லா கார்களுக்குப் பிட்காயின் ஏற்பதை நிறுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.