ஐபிஎல் தொடர் தடைபட்டதை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பக்கம் திரும்பியுள்ளது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து புறப்படுகின்றனர்.
இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்னதாகவே இந்திய வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் பிசிசிஐ-ன் குவாரண்டைனில் வைக்கப்படவுள்ளனர். இந்த குவாரண்டைனின் போது எந்தவித பயிற்சிக்கும் அனுமதி இல்லை.
இங்கிலாந்து சென்றடைந்தவுடன் அங்கும் 10 நாட்கள் குவாரண்டைனில் வீரர்கள் இருக்க வேண்டும். அந்த 10 நாட்கள் முடிந்தவுடன் தான் இந்திய வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி போன்ற முக்கிய ஆட்டங்களில் அணி வீரர்கள் மிக தாமதாக பயிற்சி தொடங்குவது பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இந்திய அணி ஒரு வாரம் கூட பயிற்சிக்கு காலம் கிடைக்காது. எனவே இங்கிலாந்தில் குவாரண்டைனில் காலத்தில் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டது.
இந்நிலையில் அதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது.