PSBB இன் தற்போதைய மற்றும் முன்னர் இப்பள்ளியில் படித்த மாணவர்கள், PSBB பள்ளியின் ஆசிரியருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் (Sexual Harassment) மற்றும் தகாத நடத்தை குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணம் இருந்தனர். மாணவர்களை தகாத முறையில் தொடுவது, மாணவர்களின் உடல் குறித்து கருத்து தெரிவிப்பது, தன்னுடன் மாணவர்களை வெளியே வர சொல்வது, ஆன்லைன் வகுப்பில் மேலாடை இல்லாமல் வருவது, இடுப்பில் ஒரு துண்டு மட்டும் அணிந்துகொண்டு ஆன்லைன் வகுப்புக்கு வருவது, ஆபாச வலைத்தள இணைப்புகளை தனது மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்று ஆசிரியர் மீது பல குற்றசாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
இதற்கிடையில் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இன்று காவல் துறை அந்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தியது. நீண்ட நேரமாக நடந்த விசாரணைக்குப் பின்னர் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. ஆசிரியர் ராஜகோபாலன் காவல் துறை அவரை விசாரணைக்கு அழைக்கும் முன்னர் தன் தொலைபேசியில் இருந்த பல தரவுகளை நீக்கியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. அந்த தரவுகளை மீட்க தொழில்நுட்ப வல்லுனர்களிடம் அவரது தொலைபேசி ஒப்படைக்கப்பட்டுள்ளது.