சமீப காலமாக பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தேர்வு முறை குறித்து தினம் தினம் புதிய குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் 4வது ஆளாக இன்று சீனியர் வீரர் சோஹிப் மாலிக் ஒருபடி மேல் சென்று நெப்போட்டிசம் உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணியில் சமீப காலமாக சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. சமீபத்தில் முகமது அமீர், பாகிஸ்தானில் அனுபவமே இல்லாத இளம் வீரர்கள் சர்வதேச தொடரில் கட்டாயமாக களமிறக்கப்படுகிறார்கள் எனக்கூறியிருந்தார். அதே போல கேப்டனுக்கு நெருக்கமான வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவதாக வீரர் ஜுனைத் கான், கூறினார்.