பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், காய்நடை மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம், பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம் போன்றவையும் வழக்கம்போல் இயங்கலாம்.
பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும். வேளாண் விளைபொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொன்று செல்ல அனுமதிக்கப்படும். சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும். உரிய மருத்துவ காரணங்கள் இறப்புகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு செல்ல இ பதிவு அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மின்னணு இ சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். வெளியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி இன்றும் நாளையும் அரசு, தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி. உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.