டிவைன் பிராவோவுக்கு தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் பேராதரவு உண்டு. கிரிக்கெட்டோடு அல்லாமல் தமிழ் கலாச்சாரத்தை நேசித்து அதனுடன் ஒன்றிணைந்தவர் பிராவோ. இவர் பாடுவதிலும் வல்லவர்.
தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வரும் சூழ்நிலையில் தமிழக மக்கள் பாதுகாப்பாக இருப்பது பற்றி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “வணக்கம், நான் டி.ஜே. பிராவோ. சென்னை எனக்கு இரண்டாவது வீடாகும். தமிழகத்தின் தற்போதைய சூழலை கவனித்து வருகிறேன். தங்களைச் சுற்றியுள்ளவர்கள், நண்பர்களை பாதுகாத்து வைத்துக் கொள்ளவும்.
அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள். நீங்கள் அனைவருமே சாம்பியன்கள். அரசு வகுத்துள்ள கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடந்து கொள்ளுங்கள்.
வாய்ப்பு கிடைக்கும் போது கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுங்கள். கொரோனாவிலிருந்து விரைவில் மீள்வீர்கள்” என்று கூறியுள்ளார்.