தமிழ்நாட்டில் 34,867 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 404 பேர் இறந்தனர். இதனுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 20,872-ஐ எட்டியுள்ளது.
இன்று 27,026 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் 15,54,759 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 4985 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.