தமிழகத்தில் அடுதத் 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மின்னல், இடியுடன் கூடிய மழை (Rain) பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.