இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் மக்களை தடுப்பூசி போடும்மாறும் அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற விதியை அரசு கொண்டுவர வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுவிட்டு வந்த பிறகுதான் அவர்களுக்கு உரிய ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்ற முறையை செயப்படுத்தினால் தான், அனைவரும் தடுப்பூசி போடுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.