மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸின் “toolkit” தொடர்பாக சம்பித் பாத்ரா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பதிவிட்ட ட்வீட்களில் “சந்தேகத்துக்கிடமானது” என்ற ரீதியில் ‘manipulation media’ என ட்விட்டர் (Twitter) டேக் செய்ததற்கான விளக்கம் அளிக்குமாறு, முன்னதாக நோட்டீஸ் அனுப்பிய டில்லி காவல்துறை, இன்று குர்கான் மற்றும் தில்லியில் உள்ள லாடோ சாராய் ஆகிய இடங்களில் உள்ள ட்விட்டர் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தியது.
இதன மூலம், இந்த ட்வீட்கள் சந்தேகத்திற்கிடமானது என்பது தொடர்பாக எங்களிடம் இல்லாத சில தகவல்கள் ட்விட்டரிடம் உள்ளன என்பதால் அது குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு ட்விட்டருக்கு அனுப்பிய நோட்டீஸில் காவல்துறை கூறியது.
“இந்த தகவல் விசாரணைக்கு மிகவும் தேவை. விசாரணையை நடத்தும் சிறப்பு பிரிவு, உண்மையை அறிய விரும்புகிறது. அடிப்படை உண்மையை அறிந்திருப்பதாகக் கூறும் ட்விட்டர் (Twitter) இதனை தெளிவுபடுத்த வேண்டும்” என்று நோட்டீஸில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ட்விட்டருக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் “டூல்கிட்” தொடர்பான சில தகவல்களை “manipulation media” என்று குறிப்பிடுவதை எதிர்த்து அதனை நீக்குமாறு கூறியிருந்தது.