கோயலகந்த் (Coelacanth)என்ற அறிய வகை மீன் டைனோசர் காலத்தையது. இந்த வகை மீன் சுமார் 328 – 492 அடி வரை நீருக்கு அடியில் இருக்கும். இந்த மீன் 1938 ஆண்டில் கடைசியாக காணப்பட்டது. அதன் பிறகு தற்போது இந்த மீன் மடகஸ்கர் கடற்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது விஞ்ஞானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த மீன் குறித்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், இது Latimeria chalumnae என்ற வகையை சார்ந்ததது என குறிப்பிட்டுள்ளனர். இது அழிந்ததாக கருதப்பட்ட அரிய வகை உயிரினம் என்று கூறப்படுகிறது. இந்த மீன் 8 துடுப்புகள், பெரிய கண்கள் சிறிய வாய் கொண்டது. மேலும் அதன் செதில்களில் வெள்ளை புள்ளிகள் காணப்படுமாம்.
இதனையடுத்து தற்போது கடல் உயிரியல் அறிஞர்கள் இந்த வகை மீனை பாதுகாப்பது குறித்து விவாதங்களை தொடங்கியுள்ளனர். சமீப காலமாக உலக அளவில் மீன்களுக்கும் அது சார்ந்த பொருட்களுக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மீன்களின் துடுப்புகள் மற்றும் மீன் எண்ணைக்கு தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீன் பிடிப்பது அதிகரித்திருக்கிறது. விற்பனை என்ற ஒன்று மட்டுமே பிரதானமாக இருப்பதால் மீன்கள் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க மீன் பிடித்தல் என்பது முறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மீனவர்களுக்கு அரிய வகை மீன்களை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.