சீன அரசு கிரிப்டோ வர்த்தகச் சேவையை அளிக்க நிதியியல் நிறுவனங்கள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களையும் கிரிப்டோ வர்த்தக எதிராக நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ள வேளையில் எச்சரிக்கையுடன் செயல்பட எச்சரித்துள்ளது.
இப்புதிய தடை உத்தரவின் மூலம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், பேமெண்ட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிரிப்டோகரன்சி தொடர்புடைய எந்தச் சேவைகளையும் அளிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.