சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள டாலியில் நேற்று இரவு 9.48 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானது . இதில் 3 பேர் பலியானதாகவும் 27 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியானது.
நிலநடுக்கம் காரணமாக சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. யுனான் மாகாணத்தில் சில நடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரம் கழித்து அங்கிருந்து 1200 கிலோ மீட்டர் தொலைவில் திபெத்திய பள்ளத்தாக்கிற்கு வடமேற்கில் உள்ள குயிங்காய் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.3ஆக பதிவானது.