இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிங்கப்பூர் அரசு இன்று முதல் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. சிங்கப்பூரில் இன்று முதல் மே 28ம் தேதி வரை தொடக்க நிலை மற்றும் ஜூனியர் காலேஜ் பள்ளிகளை மூட வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. வீட்டிலேயே இருந்து வகுப்புகளை ஆன்லைன் மூலமாக தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.