ஈ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் (Snapdeal) கோவிட் -19 நோயாளிகளுக்காக ஒரு பெரிய முயற்சியை எடுத்துள்ளது.
Snapdeal சஞ்சீவானி (Sanjeevani) என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளத்தின் மூலம், பிளாஸ்மா தேவைப்படுபவர்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டு நல்ல ஒருங்கிணைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம், பிளாஸ்மா தேவைப்படுபவர்கள் பிளாஸ்மா நன்கொடையாளர்களை எளிதாக தொடர்பு கொள்ளலாம். ஸ்னாப்டீல் அதன் வரம்பு எல்லைகளை பயன்படுத்தி சிறிய நகரங்கள் மற்றும் ஊர்களில் பிளாஸ்மா நன்கொடையாளர்களைத் தேடி பிளாஸ்மா தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும். இந்த மொபைல் செயலி அல்லது வலைத்தளம் மூலம் சஞ்சீவனியை எளிதாக அணுகலாம்.