கொரோனா பாதிப்பு தொடர்பாக 10 மாநிலங்களின் மாவட்ட ஆட்சியர்கள், சில மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மமதா பானர்ஜியும் பங்கேற்றார்.
இக்கூட்டம் முடிவடைந்ததும் செய்தியாளர்களிடம் மமதா பானர்ஜி கூறியதாவது: மாநிலங்களின் முதல்வர்களை ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்துவிட்டு அவர்களை பேச அனுமதி மறுப்பது என்பது துரதிருஷ்டவசமானது. பிரதமர் மோடி எங்களிடமும் பேசவில்லை. எங்களை பேசவும் அனுமதிக்கவும் இல்லை.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நாங்கள் அவமதிக்கப்பட்டதாகவே உணருகிறோம். கொரோனா தடுப்பூசிகளைப் பற்றியோ ரெம்டெசிவிர் மருந்துகள் பற்றியோ எந்த கேள்வியையும் பிரதமர் கேட்கவே இல்லை. கறுப்பு பூஞ்சை தொடர்பாகவும் பிரதமர் மோடி கேட்கவும் இல்லை