ரங்கசாமி கடந்த மே 7 ஆம் புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார்.இதனையடுத்து,முதல்வர் ரங்கசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால்,கடந்த 9 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு பரிசோதனையில் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனைத் தொடர்ந்து,முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில்,கொரோனா தொற்று குணமடைந்து முதல்வர் ரங்கசாமி கடந்த சனிக்கிழமையன்று புதுச்சேரியில் உள்ள தனது வீட்டிற்க்கு திரும்பியுள்ளார்.