இரண்டாம் அலை பரவலில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்த மருந்தால் பெரிதாக எந்த பயனும் இல்லை அதற்கு பதிலாக ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறி வந்த போதிலும் ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவை அதிகரித்து வந்தது.
தமிழகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாங்கிச்சென்றனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு தற்போது கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தினை நிக்கியுள்ளது.