கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு மாநில வேலைவாய்ப்பில் 5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் திரத்சிங் ராவத் அறிவித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதையாகும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. அவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை பல மாநில அரசுகளும் கையில் எடுத்துள்ளன. பல்வேறு மாநில அரசுகளும் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. டெல்லி அரசும் இலவச கல்வி வழங்குகிறது.