ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் பகாடியா கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 89. ராஜஸ்தானின் முதல் தலித் முதல்வர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் மந்திரியாக 1980 முதல் 1981 வரை செயல்பட்டவர்.அதுமட்டுமல்லமல் இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெகநாத் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெகநாத் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.