கொரோனா மூலம் பல ஆயிரம் பேர் தினமும் இறந்து வரும் வேளையில் டாடா ஸ்டீல் தனது ஊழியர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரேனும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தால், அவரின் குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் 60 வயது வரையில் அவரின் சம்பளத்தை முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் என டாடா ஸ்டீல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.