நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான நிலையில்,நாளுக்கு நாள் இறப்போரின் விகிதமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக தலா ரூ. 50,000 வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று அறிவித்துள்ளார்.மேலும், வீட்டில் வருமானம் ஈட்டுபவர்கள் உயிரிழந்தால், மாதம் ரூ.2,500 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.