தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என்ற தலைப்பில் வெளியிட்டு உள்ளார்.
அதன் பின் பேசிய அவர், மே 10-ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தி இருந்தோம். ஆனால் மக்கள் சிலர் இந்த தளர்வுகளை பயன்படுத்தி வெளியில் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தனர். எனவே தான் தற்போது தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு தவிர வேறு வழியில்லை. கொரோனா தானாக பரவுவதில்லை. மனிதர்கள் மூலமாக தான் பரவுகிறது. அத்தகைய மனிதர்களாக யாரும் இருக்கக்கூடாது.யாருக்கும் கொரோனா வைரஸை பரப்பவும் மாட்டேன். மற்றவர்களிடம் இருந்து இந்த வைரஸை வாங்கவும் மாட்டேன் என பொதுமக்களாகிய நீங்கள் உறுதி எடுக்க வேண்டும்.பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்.
இந்த ஒரு வாரம் முழு ஊரடங்கை நாட்டு மக்கள் அனைவரும் தவறாது கடைபிடித்தால் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் சகோதரனாக உங்களில் ஒருவனாக கேட்டுக்கொள்ளுகிறேன் முக கவசத்தை முழுமையாக அணியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.