மாதாந்திர கட்டாய மற்றும் அத்தியாவசிய செலவுகளின் பட்டியலில் முக்கியமான ஒன்றாக இருப்பது மொபைல் ரீசார்ஜ் செலவுகள். கொரோனா தாக்கம் காரணமாக பெரும்பாலான மக்கள் மீண்டும் வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை செய்து முடிக்கும் Work From Home-க்கு திரும்பியுள்ள நிலையில், ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கான ( 28 நாட்கள் அல்லது 56 நாட்களுக்கு) ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களுக்கு பதில் கூடுதல் நன்மைகளுடன் (additional benefits) நாளொன்றுக்கு அதிக டேட்டாக்களை பெற விரும்புகிறார்கள். ஆனால் இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் ஒரு வருட ரீசார்ஜ் பிளானிற்கு செல்ல தேவை இல்லை.
ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ (Vi) உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் (84 நாட்கள்) தினசரி 1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இந்த திட்டங்களில் சில கூடுதல் டேட்டா கூப்பன்கள் (extra data coupons) மற்றும் குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்ளின் ஸ்ட்ரீமிங் Apps-களுக்கான அக்ஸஸ் போன்ற கூடுதல் நன்மைகளையும் தருகின்றன.
அந்த வகையில் Vi நிறுவனம் தனது தினசரி 2 ஜிபி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன் டபுள் டேட்டா நன்மையை (double data benefit) அளிக்கிறது. இந்த பிளான் ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு மிகவும் குறைந்த விலையில் வழங்குகிறது. தினசரி 1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாக கூடிய பின்வரும் பிளான்கள் விவரம் பின்வருமாறு.