நாளை முதல் மிகத் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் ரேஷன் கடைகள் திறக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி -யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், ரேஷன் கடைகள் இயங்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கலந்தாலோசித்து உரிய ஏற்பாடு செய்யப்படும்.